30/07/2009 19.58.24 மணிக்கட்டில் ஏற்பட்ட விபத்து இறைத்திட்டம் என்கிறார் திருத்தந்தை.3007.
Stanislaus Xavier
கையின் மணி்க்கட்டில் ஏற்பட்ட விபத்து கடவுளின் திட்டமாக இருக்கலாம் என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .
வட இத்தாலியில் விடுமுறையைக் கொண்டாடிய திருத்தந்தை பிரியாவிடையின் போது அவர் கீழே விழுந்ததில் அவரது மணிக்கட்டில் உண்டான உடைசல் பற்றிக் கூறினார் . அவரது காவல்தூதர் அதைத் தடுக்காது அவ்வாறு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததற்கு இறைவனின் திட்டமே காரணம் எனத் திருத்தந்தை தெரிவித்தார் . இன்னும் அதிகமாக பொறுமையிலும் தாழ்ச்சியிலும் வளர்ப்பதற்கான கடவுளின் திட்டமாக அது நடைபெற்றிருக்கலாம் என திருத்தந்தை தெரிவித்தார் . அவரது விடுமுறையை ஆழ்ந்த அமைதியில் இறைவனின் குரலாகிய பறவைகளின் கீதம் , மற்றும் மழையோசை தவிர வேறு எவ்வித ஓசையையும் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார் . செய்தி ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் தம்மைப் புகைப்படம் எடுக்க திருத்தந்தை அனுமதி வழங்கினார். ஜூலை 13 தேதியிலிருந்து லெஸ் கோம்பஸில் தங்கியிருந்த திருத்தந்தை பிரியாவிடையின் போது 35 இளைஞர்களைச் சந்தித்து வாழ்த்துக்கூறினார். உரோமையிலிருந்து 30 கிலோ தொலைவில் இருக்கும் காஸ்டல் காண்டால்போவில் திருத்தந்தை அக்டோபர் மாதம் தொடக்கம் வரை தங்கி தம் பணிகளைத் தொடர்வார் . வழக்கம்போல புதன்கிழமைகளில் பொது மறைபோதகத்தை காஸ்டல் காண்டால்போவிலிருந்து கொடுப்பார் .