14/08/2009 17.46.23 தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.
Stanislaus Xavier
தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட். தற்பொழுது திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் காஸ்டல் காண்டால்போ என்னும் அவரது கோடைகால இல்லத்திலிருந்து அவரது வழக்கமான பணிகளை ஆற்றிவருகிறார் . இந்த ஆகஸ்ட் 27 லிலிருந்து 30 வரை காஸ்டல் காண்டால்போவில் அவரது முந்நாள் மாணவர்களோடு கலந்து பேசுவார் . டியூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் ரீகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் பயின்ற மாணாக்கர்கள் அவரைச் சந்திக்க உள்ளனர் . ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவின் பேராயர் கர்தினால் ஜோசப் ஷூவன்பர்க்கும் இக்னேஷியஸ் வெளியீட்டைச் சேர்ந்த தந்தை ஜோசப் பெஸ்சியோவும் முன்னர் திருத்தந்தையோடு இஸ்லாம் பற்றியும் உயிரியல் கோட்பாடு பற்றியும் கலந்து பேசியுள்ளனர் .