02/11/2009 15.13.03



அமெரிக்க ஐக்கிய நாட்டின் நலஆதரவு சீர்திருத்தத் திட்டத்தில் கருக்கலைத்தலுக்கான நிதியுதவியும் இணைத்துக் கொள்வதை எதிர்க்க வேண்டும், ஆயர்கள்


|

நவ.02,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டின் நலஆதரவு சீர்திருத்தத் திட்டத்தில் கருக்கலைத்தலுக்கான நிதியுதவியும் இணைத்துக் கொள்வதை எதிர்க்க வேண்டும் என விண்ணப்பித்து பத்தொன்பதாயிரம் பங்குத் தளங்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
நலஆதரவு சீர்திருத்தத்தில் கருக்கலைத்தலுக்கான நிதியுதவியையும் இணைக்கக் கூடாது என காங்கிரஸ் அவைக்குக் கூறுங்கள் என்ற தலைப்புடன் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தி, கருக்கலைத்தலுக்கான நிதியுதவியை வன்மையாக எதிர்க்கவுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ஓர் உண்மையான நலஆதரவுத் திட்டம் என்பது, குழந்தை கருவில் உருவானது முதல் இறப்புவரை வாழ்வையும் மாண்பையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என உரைக்கும் ஆயர்கள், கருக்கலைத்தல் மற்றும் மனச்சான்று தொடர்புடையவைகளில் தற்போதைய பரிந்துரைகள் வாழ்வுக் கொள்கைகளுக்கு எதிராகச் செல்வதாகக் கவலையை வெளியிட்டனர்.
கருக்கலைத்தலுக்கு நிதியுதவி வழங்கும் கொள்கைகளில் வாழ்வுக்கு ஆதரவான அக்கறைகளுக்கும் மனச்சான்றின் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
|