04/11/2009 14.55.53 இளையோரின் இசைக்குழுஇந்தியாவில் வடகிழக்குப்பகுதிகளில் சமாதானத்தைப் பரப்ப முயற்சி
நவ. 04, 2009. 20 இளையோரைக் கொண்ட ஒரு இசைக்குழு இந்தியாவில் நாளும் வன்முறைகளைச் சந்தித்து வரும் வடகிழக்குப் பகுதிகளில் இசையின் வழி சமாதானத்தைப் பரப்ப முயற்சி செய்து வருகிறது. ரெக்ஸ் பேண்ட் 4 பீஸ் (Rexband 4 Peace) என்ற பெயர் கொண்ட இந்த இசைக்குழுவில் உள்ள அனைவரும் பல துறைகளில் பணி புரிபவர்கள் எனவும், ஒரு மாதத்திற்கு இவர்கள் தங்கள் பணிகளிலிருந்து விடுமுறை பெற்று இந்த இசைப் பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் கொல்கத்தாவில் தங்கள் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்த இக்குழுவினர் பல்வேறு நகரங்களில் தங்கள் இசைநிகழ்ச்சிகளைத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். இவர்களது முயற்சியைப் பெரிதும் பாராட்டிய குவகாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் இவ்விளையோரின் வழியாக இறைவன் பல உள்ளங்களைத் தொட்டு, மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதைப் பார்ப்பது மிகவும் நிறைவைத் தருகிறதேனக் கூறியுள்ளார்.