வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


04/11/2009 15.41.53



இன்றைய நற்செய்தி. நவ. 05







லூக்கா நற்செய்தி அதிகாரம் 15, 1-10

வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ' உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன் ' என்பார். அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 'பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ' என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் ' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். '


  « அட்டவணைக்குச் செல்

 




05/11/2009 16.02.14
இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பு, நமக்கு மிகவும் பிடித்தமான அடையாளத்தை நம்மிடமிருந்து எடுத்துவிட முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கின்றது, திருப்பீடச் செயலர்



05/11/2009 16.01.11
துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும், திருத்தந்தை



04/11/2009 14.56.05
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருட்சகோதரிகளின் சபைகளில் அப்போஸ்தலிக்க மேற்பார்வை


04/11/2009 14.55.34
இறந்தோரைப்  புதைப்பது, அல்லது தகனம் செய்வது குறித்த திருச்சபையின் கருத்துக்களைத் தெளிவாக்கும் முயற்சியில் இத்த்தாலியத் தலத் திருச்சபை


04/11/2009 14.55.08
சிலுவை குறித்த மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை தருகிறது - வத்திக்கான்



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top