06/11/2009 14.48.24 அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஏற்படும் தவறுகள் கண்டு பயப்படக் கூடாது, பாப்பிறை அறிவியல் கழகத் தலைவர்
நவ.06,2009 அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஏற்படும் தவறுகள் பிற கண்டுபிடிப்புகளுக்குப் பாதை அமைப்பதால் அத்தவறுகளைக் கண்டு பயப்படக் கூடாது என்று பாப்பிறை அறிவியல் கழகத் தலைவர் கர்தினால் ஜோவான்னி லயோலோ கூறினார்.
பாப்பிறை அறிவியல் கழகம் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள விண்வெளி உயிரியல் பற்றிய ஒருவாரக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கர்தினால் லயோலோ இவ்வாறு கூறினார்.
புதிய புதிய பாதைகளில் நடத்தப்படும் கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியல் முன்னேற்றம் காண முடியும் மற்றும் இவை மனித சமுதாயத்தைப் புதிய அறிவுக்கு இட்டுச செல்லும் என்றும் கர்தினால் லயோலோ கூறினார்.