வத்திக்கான் வானொலியை உலகெங்கும் அறியச் செய்வதற்கு உதவும் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது மக்கள் தொடர்பு அலுவலகம்.
ஸ்டிக்கர்கள், வண்ண அட்டைகள், பல மொழிகளில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், ஒலிநாடாக்கள், புத்தகங்கள், குறுந்தகடுகள் (இத்தாலியம்) எனப் பல நினைவுப் பொருட்களை இவ்வலுவலகம் வெளியிடுகிறது.
“வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகள்” (“Radiovaticana Programmes”) என்ற சிற்றேட்டை தயாரித்து உலகெங்கும் இலவசமாக அனுப்புகிறது. அது நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிபரப்பு குறித்த தகவல்களைக் கொண்டுள்ளது.
தொடர்புக்கு : promo@vatiradio.va
நேயர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வது இந்த மக்கள் தொடர்பு அலுவலகத்தின் முக்கியப் பணியாகும். மேலும், இவ்வலுவலகம், ஒவ்வொரு நாளும் வானொலியைப் பார்வையிடும் குழுக்களோடு பேசி, வானொலியைச் சுற்றிக்காட்டி விளக்குகிறது. பெருமளவான நேயர் கடிதங்களுக்குப் பதில் எழுதுகின்றது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் நேயர்களுக்கு வண்ண அட்டைகளைத் தபால் மூலம் அனுப்புகிறது.
ஒலிபரப்புத் திறன், பிற வானொலிகளின் குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கான விபரங்களைப் பெறுகிறது. எல்லா வயதினரும் தங்களின் கருத்துக் கடிதங்களையும் பரிந்துரைகளையும் அனுப்புகின்றனர்.
நேயர்களுடன் கொண்டிருக்கும் இந்தத் தொடர்புகள் கடந்த பல ஆண்டுகளாக அன்றாட நிகழ்வாக மாறி வருகின்றன. வத்திக்கான் வானொலியின் பல்வேறு நிகழ்ச்சிகளின் தரத்தையும், பிரபலத்தையும் உணர்த்தும் ஓர் அடையாளமாய் விளங்குவது நேயர்களின் கடிதங்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் இக்கடிதங்கள், வத்திக்கான் வானொலியின் இன்றியமையாத அளவுமானியாகச் செயல்படுகின்றன.